தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.4 கோடிக்கும் மேல் அபராதம் வசூல்

சென்னை போக்குவரத்து காவல்துறையினர் குடிபோதையில் வாகனம் ஓட்டி போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து 4,26,13,000 ரூபாய் அபராதமாக வசூல் செய்துள்ளனர்.

A fine collected over four crore rupees cases of drunken driving
குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் நான்கு கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூல்

By

Published : Feb 26, 2023, 7:08 PM IST

சென்னை காவல்துறை விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாகும். ஆகவே, குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு அபராதத் தொகை ரூ.10,000 அதிகமாக இருப்பதால் பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை.

மேலும் 7,667 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இதுபோன்ற விதிமீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னை பெருநகரில் 10 இடங்களில் அமைந்துள்ள போக்குவரத்து அழைப்பு மையங்கள் மூலம் தகவல் தெரிவித்து, கடந்த ஒரு வாரத்தில் அவர்களை நேரில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

இதன் விளைவாக சென்னை போக்குவரத்து காவல் துறையின் அழைப்பு மையங்களின் அழைப்பை ஏற்று 545 பேர் ஆஜராகி அவர்களது நிலுவை வழக்குகளின் அபராதங்களை இணையதளம் மூலம் செலுத்தினார்கள். மேலும் பலர் அழைப்பு மையங்களுக்கு வெளியில் பணம் செலுத்தியதால், அவர்கள் வேறுவிதமாக அபராதம் செலுத்தியிருந்தாலும், அழைப்பு மையங்களின் உதவியுடன் முடிந்த வழக்குகளின் விவரங்களையும் அபராதத் தொகையையும் இந்த அழைப்பு மையங்களில் இருந்து சேகரித்தனர்.

இந்த தொடர் நடவடிக்கையின் மூலம் 10 அழைப்பு மையங்களில் 736 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அபராதத் தொகையாக 76,74,500 செலுத்துயுள்ளனர். கடந்த மூன்று வாரங்களில் அழைப்பு மையங்களின் இதேபோன்ற நடவடிக்கைகளால் 3,376 வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ.3,49,38,500 அபராத தொகை செலுத்தப்படுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 4,112 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு. ரூ.4,26,13,000 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் நடவடிக்கையின் மூலம் நிலுவையில் உள்ள குடிபோதை வழக்குகளை தீர்வு காண்பதற்காக போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக செயல்படுபவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, வேறு எந்த வாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துக்கள் உட்பட்டவைகளை பறிமுதல் செய்ய 347 நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்த செயல்பாட்டில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சொல்பேச்சு கேட்ட சுள்ளிக்கொம்பன்; சாலையைக் கடக்க வாகனங்கள் செல்லும் வரை காத்திருந்த காட்டுயானை

ABOUT THE AUTHOR

...view details