சென்னை: சட்டப்பேரவை இரண்டாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் வேல்முருகன், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் கூறினார். இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இது பற்றி ஆளுநர் உரையிலே கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடைசி 10 ஆண்டுகளில் எந்த சட்டத்தின் அடிப்படையில், அரசாணைகள் மூலம் தமிழர்களை தவிர வேற மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டது என ஆய்வு செய்து அந்த தவறுகள் சரி செய்யப்படும். மேலும் அந்த தவறுகள் நடைபெறாது வகையில் தமிழ்நாடு அரசு செயல்படும் என்றும் தெரிவித்தார்.