சென்னை:தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 20ஆம் தேதி பொதுபட்ஜெட், 21ஆம் தேதி வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யபட்டது. பின்னர் துறை ரீதியான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் துறையின் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கிருஷ்ண முரளி, “கடையநல்லூரில் சார்நிலை கருவூலம் அமைக்க அரசு ஆவன செய்யுமா” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “கடையநல்லூரில் புதிய சார்நிலை கருவூலம் அமைப்பது தொடர்பாக கருவூல கணக்கு ஆணையரகத்திடமிருந்து கருத்து வரப்பெற்று அரசின் பரிசீலனையில் உள்ளது. மேலும் கருவூல கணக்குத் துறையின் மறுசீரமைப்பிற்கு பிறகு கடையநல்லூரில் புதிய சார்நிலை கருவூலம் அமைப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்படும்” என்றார்.
இதற்கு நன்றி தெரிவித்த உறுப்பினர் கிருஷ்ண முரளி, “வெகு விரைவாக சார்நிலை கருவூலம் அமைத்து தந்து வழிவகை செய்து தர வேண்டும்” என கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த அமைச்சர், “நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறையில் பல சீர்திருத்தங்கள் ஏற்கனவே செய்த பிறகும் இன்னும் பல நடவடிக்கைகள் உள்ளன.