தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

சென்னை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரசாந்த் வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

By

Published : Jan 5, 2023, 10:53 AM IST

Updated : Jan 5, 2023, 4:47 PM IST

சென்னை: சென்னை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 723 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளும் குறைந்தபட்சமாக எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் உள்ளன.

கடந்த நவம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சுறுக்கமுறை திருத்தம் மூலம் சென்னையில் 54,347 வாக்காளர்கள் பெயர் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறது. இதே போல் 64,527 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 3 லட்சத்து 07 ஆயிரத்து 831 வாக்காளர்களும், குறைந்த பட்சமாக துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 125 வாக்காளர்களும் உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக சென்னையில் 19 லட்சத்து 09 ஆயிரத்து 512 ஆண் வாக்காளர்களும், 19 லட்சத்து 71 ஆயிரத்து 653 பெண் வாக்காளர்களும், 1,112 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 38 லட்சத்து 82 ஆயிரத்து 277 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த நவம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஒப்பிடும்போது சென்னையில் மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில், ஆர்கேநகர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 069 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 6 ஆயிரத்து 316 குறைந்து 2 லட்சத்து 39 ஆயிரத்து 753 ஆக உள்ளது.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 359 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 484 என குறைந்து 2 லட்சத்து 79 ஆயிரத்து 875 ஆக உள்ளது. கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 584 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 614 என அதிகரித்து 2 லட்சத்து 77 ஆயிரத்து 198 ஆக உள்ளது.

வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 478 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை 516 அதிகரித்து 2 லட்சத்து 39 ஆயிரத்து 994 ஆக உள்ளது. திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 09 ஆயிரத்து 352 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 967 அதிகரித்து 2 லட்சத்து 12 ஆயிரத்து 319 ஆக உள்ளது.

எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 710 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை 1,126 அதிகரித்து 1 லட்சத்து 90 ஆயிரத்து 836 ஆக உள்ளது. ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 639 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை ஆயிரத்து 43 ஆக அதிகரித்து 1 லட்சத்து 89 ஆயிரத்து 682 ஆக உள்ளது.

துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 211 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 086 குறைந்து 1 லட்சத்து 70 ஆயிரத்து 125 ஆக உள்ளது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 574 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 083 அதிகரித்து 2 லட்சத்து 30 ஆயிரத்து 657 ஆக உள்ளது.

ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 450 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை 29 அதிகரித்து 2 லட்சத்து 33 ஆயிரத்து 479 ஆக உள்ளது. அண்ணாநகர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 100 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை 461 அதிகரித்து 2 லட்சத்து 73 ஆயிரத்து 561 ஆக உள்ளது.

விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 77 ஆயிரத்து 516 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை 561 குறைந்து 2 லட்சத்து 76 ஆயிரத்து 955 ஆக உள்ளது. சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 421 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை ஆயிரத்து 320 அதிகரித்து 2 லட்சத்து 67 ஆயிரத்து 741 ஆக உள்ளது.

தியாகராய நகர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 353 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை ஆயிரத்து 659 குறைந்து 2 லட்சத்து 30 ஆயிரத்து 694 ஆக உள்ளது. மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 647 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை 930 அதிகரித்து 2 லட்சத்து 61 ஆயிரத்து 577 ஆக உள்ளது.

வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 3 லட்சத்து 05 ஆயிரத்து 994 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை 1,838 அதிகம் 3 லட்சத்து 07 ஆயிரத்து 831 ஆக உள்ளது. கடந்த நவம்பரில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலுடன் இறுதி வாக்காளர் பட்டியலை ஒப்பிடுகையில், சென்னையில் மொத்தம் 10 ஆயிரத்து 180 வாக்காளர்கள் குறைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Amazon layoff: 18,000 ஊழியர்களை அதிரடியாக நீக்கிய அமேசான்!

Last Updated : Jan 5, 2023, 4:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details