ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த மனுவிற்கு விளக்கமளித்து வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலையை மூட கொள்கை முடிவு எடுத்ததாக அரசு கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், ஆலை மூடப்பட்டப் பிறகு காற்று, தண்ணீர் மாசு குறைந்துள்ளதாக அரசு கூறுவதில் எந்த ஆதாரமும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தது.