சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.அசோக் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'இந்துக் கடவுள் கிருஷ்ணரை பொள்ளாச்சி பாலியல் வழக்குடன் ஒப்பிட்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார். அந்த வீடியோ, யூட்யூப் மற்றும் செய்தித்தாள்களில் வெளியான நிலையில் தொடர்ந்து அவதூறான கருத்துகளை சமூக வலைதளங்களில் வீரமணி பரப்பி வந்தார்.
கி.வீரமணி மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி - case
சென்னை: இந்துக் கடவுள் கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த கி.வீரமணியை கைது செய்ய உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, மனுதாரர் அசோக் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கி.வீரமணி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். ஆனால், கி.வீரமணியை கைது செய்ய காவல் துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனால், கி.வீரமணியை கைது செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்' என மனுவில் குறிப்பிட்டுள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்ரமணியன், மனுதாரர் தொடர்ந்த வழக்கில் அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.