தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள ஆடைகள் திருடியவர்களை தேடும் காவல்துறை - தமிழ் செய்திகள்

சென்னை: துணிக்கடையில் புகுந்து 50 ஆயிரம் மதிப்புள்ள ஆடைகளை திருடியவர்களை காவல்துறையினர் தேடுவருகின்றனர்.

50 ஆயிரம் மதிப்புள்ள ஆடைகள் திருடு போனது
50 ஆயிரம் மதிப்புள்ள ஆடைகள் திருடு போனது

By

Published : May 14, 2020, 5:27 PM IST

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் மார்டின் சகாயராஜ் இவர் அரும்பாக்கம் விநாயகபுரம் பிரதான சாலையில் கிங்ஸ் ஸ்டார் பொட்டிக் என்ற ஆடை கடையுடன் கூடிய டெய்லரிங் கடை நடத்தி வருகிறார்.

கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிலிருந்து மூடப்பட்ட கடை கடந்த மே 12ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (மே 13) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் இவரது கடை ஷட்டரை உடைத்து உள்ளே இருந்த ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகமான மதிப்புள்ள புடவைகள், சுடிதார்கள், வேட்டி சட்டைகள், கல்லா பெட்டியில் இருந்த ரூபாய் 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இன்று காலை கடைக்குச் சென்ற சகாயராஜ், கடை உடைக்கப்பட்டு பொருள்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: புதுச்சேரி மாணாக்கர் கைவண்ணத்தில் உருவான கிருமிநாசினி தெளிப்பான் கருவி!

ABOUT THE AUTHOR

...view details