சென்னை:சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் திட்டங்களின் செயல்பாடுகள், தரவுகள் குறித்து ஆராய மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர்கள், மாதத்தில் நான்கு நாட்களாவது ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசின் திட்டங்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைகிறதா? முறைகேடுகள் நடைபெறுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.