தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்திய தொழில் துறை கூட்டமைப்பான ஃபிக்கியின் 2ஆவது நாள் கருத்தரங்கம் - FICCI

சென்னை: தொழில்நுட்பம் மூலமாக வளர்ச்சி அடைவது, புதிய வாய்ப்புகளைத் தேடுவது (டெகோ) என்னும் தலைப்பில் இந்திய தொழில் துறை கூட்டமைப்பான ஃபிக்கியின் இரண்டாவது நாள் கருத்தரங்கம் இணையதளம் வாயிலாக இன்று (அக். 10) நடைபெற்றது.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பான ஃபிக்கியின் இரண்டாவது நாள் கருத்தரங்கம்
இந்திய தொழில்துறை கூட்டமைப்பான ஃபிக்கியின் இரண்டாவது நாள் கருத்தரங்கம்

By

Published : Oct 10, 2020, 3:05 PM IST

சென்னையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியில் அரசின் பங்கு, முயற்சிகள் குறித்து இ-சேவை தலைமைச் செயல் அலுவலர் சந்தோஷ் மிஷ்ரா விவரித்தார்.

அதில், "வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அரசு முனைப்புக் காட்டிவருகிறது. நாட்டிலேயே முதல் முறையாகத் தமிழ்நாடு அரசு செயற்கை நுண்ணறிவு செயல்முறையை வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்காக டீப்மேக்ஸ் (DEEPMAX) என்னும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்திய தொழில் துறை கூட்டமைப்பான ஃபிக்கியின் இரண்டாவது நாள் கருத்தரங்கம்

தகவல் பாதுகாப்பு, வெளிப்படைத் தன்மை ஆகியவற்றிற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் செயற்கை நுண்ணறிவை பயிர்களின் விளைச்சல் குறித்த கணிப்பு, மழை தட்பவெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம்.

அதேபோல், தமிழ்நாட்டில் பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் மூலம் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை இணைக்கலாம்" எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பணப் பரிவர்த்தனை, வங்கித் துறை, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக வல்லுநர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படிங்க: உலகப் பொருளாதார மன்றத்துடன் கைக்கோர்த்த தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம்!

ABOUT THE AUTHOR

...view details