தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளுக்கு பாலியல் தொந்தரவு - காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணா! - சென்னை அண்மைச் செய்திகள்

ஆபாச படங்களை காண்பித்து, மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வரும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாதர் சங்கத்தினருடன் இணைந்து பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பாலியல் தொந்தரவு
பாலியல் தொந்தரவு

By

Published : Jul 29, 2021, 6:40 AM IST

சென்னை: எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் இளங்கோவன். இவரது மனைவி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் இத்தம்பதிக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாக, கடந்த 6 மாதத்திற்கு முன்னர் இளங்கோவன் மீது கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் இளங்கோவனின் மனைவி புகார் அளித்தார்.

புகாரின் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் காவலர் இளங்கோவனின் மனைவி, இன்று (ஜூலை 28) மாதர் சங்கத்தினருடன் இணைந்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஆபாச படங்களை காண்பித்து பாலியல் தொல்லை

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த 14 வருடங்களாக எனது கணவர் என்னுடன் சண்டையிட்டு வருகிறார். தினமும் குடித்துவிட்டு, ஆபாச படங்களை காண்பித்து எனது மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.

காவலர் இளங்கோவன்

இதனால் எனது மகள் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறுகிறாள். மனமுடைந்த நானும், எனது மகளும் பீர்பாட்டிலை மிக்ஸியில் போட்டு அரைத்து குடித்தோம். ஏற்கனவே கோயம்பேடு பகுதியில் செவிலியை கைப்பிடித்து இழுத்ததாக, இளங்கோவன் 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட பாலியல் தொந்தரவு புகார் மீது, இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, இளங்கோவன் தொடர்ந்து பிரச்னை கொடுத்து வருகிறார்” என்றார்.

உடனடியாக கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான காவலர்கள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை சமாதானம் செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க:தூத்துக்குடியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details