சென்னை தரமணியிலுள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் கலந்தாய்வுக்கான சமவாய்ப்பு எண் வெளியிடும் நிகழ்ச்சி இன்று (ஆக.26) நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் சமவாய்ப்பு எண்ணை வெளியிட்டார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 834 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
இதில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 437 மாணவர்கள் கட்டணம் செலுத்தியிருந்தனர். மாணவர்கள் கோரிக்கையை ஏற்று சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இதனால் 8501 மாணவர்கள் சான்றிதழ்களை கூடுதலாக பதிவேற்றம் செய்துள்ளனர். அதில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 206 மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்திருந்தனர்.
கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களுக்கு சமவாய்ப்பு எண் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்னை, சேலம், கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 6 மண்டலங்கள் உருவாக்கப்படுள்ளன.
அந்த மண்டலங்களில் இன்று முதல் வரும் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் விளையாட்டு வீரர்கள் சான்றிதழ்களை சமர்ப்பித்து சரிபார்த்துக்கொள்ளலாம்.
விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் முடிக்கப்படவுள்ளது.
பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 7ஆதேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். ஆனால் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மறுகூட்டல் முடிவு செப்டம்பர் எட்டாம் தேதி வரை உள்ளது.