தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - ஆட்சியர் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை..! - MK Stalin

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகையும் வழங்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பரிந்துரை செய்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

By

Published : Oct 18, 2022, 4:37 PM IST

சென்னை: தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் உள்ள பொதுமக்கள் கடந்த 2018ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினர். இதன் 100வது நாள் போராட்டத்தின்போது நடைபெற்ற கலவரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை தக்கல் செய்ய நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட அறிக்கை இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமர்பிக்கப்பட்டது. அதில்,

  • துப்பாக்கிச் சூட்டின் விளைவாக இறப்பு, காயங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும், தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு காரணமாக பொதுச் சொத்துக்கள், தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் உள்ளிட்ட முந்தைய நிகழ்வுகள் குறித்தும் பல்வேறு தரப்பு விசாரணை நடத்தப்பட்டது.
  • இதன் பேரில் 17 நபர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அவரது கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்க ஆணைகள் வழங்கப்பட்டது.
  • இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
  • பல கோணங்களில் ஒட்டுமொத்தமாக கருதும்போது, இந்த சம்பவமானது காவல்துறை, அவர்களுக்கு உரிய அதிகாரத்தை பயன்படுத்தியற்கான நிகழ்வு அல்ல என்றும், நிச்சியமாக காவல்துறை வரம்பு மீறியுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • ஸ்டெர்லைட் கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை உயர் அலுவலர்களிடம் ஒருங்கிணைப்பு இல்லை.
  • போராட்டக்காரர்களை எச்சரிக்கும் விதமாக அவர்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
  • தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் நுழைந்து கண்ணில் பட்டோரையெல்லாம் காவலர்கள் தாக்கியுள்ளனர்.
  • காவல்துறை தரப்பில் மிகை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விசாரணை ஆணையம் முடிவுக்கு வருகிறது.
  • குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு குந்தகம் இன்றி, அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மூன்று வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை
  • 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை
  • இறந்தவர்களின் உறவினர்கள், சட்டபூர்வ வாரிசுகளுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கலாம்.
  • காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கலாம்.
  • இறந்துபோன ஜஸ்டின் செல்வமிதீஷின் உயிரிழப்பை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 நபர்களுக்கு இணையாக பாவித்து, அவர்களது குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தகுந்த நிவாரணத்தை வழங்குக. மேலும் அவரது தாயாருக்கு அரசு பணி வழங்கலாம்.
  • பலத்த காயமடைந்த காவலர் மணிகண்டனுக்கு மருத்துவ வசதிக்கான நிவாரணம் வழங்குக.
  • இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலங்களில் நிகழாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details