சென்னை:நுங்கம்பாக்கம் கதீட்ரல் கார்டன் சாலையில் உள்ள அதானி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்ட பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியினர், மக்கள் பணத்தை கொள்ளை அடித்த அதானியை கைது செய்ய வேண்டும். அதானி குடும்பத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். கார்ப்பரேட்டுக்கு வங்கிகள் கடன் வாழங்குவதை நிறுத்த வேண்டும்.
அதானி குடும்பம் பங்குச்சந்தை மோசடி காரணமாக உலகமய தாராளமய தனியார் கொள்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் கைது செய்தனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி தலைமை குழு உறுப்பினர் முருகன் கூறுகையில், பங்குச்சந்தையில் மோசடி செய்து மக்களின் பணத்தை அதானி குழுமம் சூறையாடி இருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 63 பெரிய ஒப்பந்தங்களை அதானி குழுமத்திற்கு மத்திய பாஜக அரசு வழங்கியிருக்கிறது. எஸ்பிஐ, எல்ஐசி போன்ற பொது நிறுவனம் மூலம் அதானிக்கு கடனாக வழங்கியுள்ளது.