சென்னை:தமிழ் திரையுலகின் உச்ச நடிகர் விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் தீவிரமாக கொண்டாடி வருகின்றனர். திரையுலகில் உள்ள பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், விஜய்யை நேரில் பார்த்து பிறந்தநாள் வாழ்த்து கூறாமல், போகமாட்டோம் என அவரது ரசிகர்கள் சிலர் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர்.
விஜய் வீட்டில் இல்லை என்று கூறியும் அவர்கள் கலைந்து செல்லாமல் இருக்கவே, அக்கம்பக்கத்தினர், போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், விஜய்யின் வீட்டிற்கு முன்பு குவிந்த ரசிகர்களிடம் அறிவுரை கூறியதையடுத்து ரசிகர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:வெற்றியோ... தோல்வியோ... சிறு சிரிப்பில் கடப்பவர் விஜய்!