இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் அவர், "ஃபானி புயல் இன்று காலை அதிதீவிர புயலாக வலுபெற்றுள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு 575 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது நாளை மாலை வரை வடமேற்குத் திசையில் நகர்ந்து அதன்பின் ஒடிசா கடற்கரையைச் சென்றடையும்.
ஃபானி புயல் அதிதீவிர புயலாக வலுபெற்றது - வானிலை ஆய்வு மையம் - depression
சென்னை: ஃபானி புயல் இன்று காலை அதி தீவிர புயலாக வலுபெற்றது என்றும், வடதமிழ்நாட்டில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
காற்றின் வேகத்தை பொறுத்தவரையில் குமரி கடல், மன்னார் வளைகுடா, வடதமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் மணிக்கு 30 முதல் 45 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும். சமயங்களில் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். மீனவர்கள் இன்று தென்மேற்குப் பகுதியிலும் நாளை மத்திய மேற்குப் பகுதியிலும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம். வடமேற்குப் பகுதி, மத்திய மேற்கு கடற்பகுதியில் மே 2ஆம் தேதி வரை கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்.
மழைப்பொழிவை பொறுத்தவரையில் வடதமிழ்நாட்டில் லேசானது முதல் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.