சென்னை:ஆர்.கே.நகர் தண்டையார்பேட்டை ரயில்வே யார்டு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை காவல் துறையினர் கைது செய்தனர்.
அப்போது அங்கிருந்து தப்ப முயன்ற காக்கா தோப்பு பாலாஜி, அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்தார். இதில் அவருடைய கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை கைது செய்த காவல் துறையினர், முதலுதவிக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சை முடிந்த பின், அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நீதிமன்றம் முன் நிறுத்தினர்.