சென்னை: மயிலாப்பூர் பல்லக்கு மாநகரைச் சேர்ந்தவர் ராஜா என்ற டொக்கன் ராஜா (44). இவர் மீது கொலை, கொள்ளை முயற்சி, ஆள்கடத்தல், வழிப்பறி உள்பட 25க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது. மேலும் பி கேட்டகரி ரவுடியான ராஜா சமீபத்தில் பாஜகவில் இணைந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் வழக்கு ஒன்றில் ஜாமின் பெற்று வெளியே வந்த டொக்கன் ராஜா, அதன் பின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்து வந்த டொக்கன் ராஜா, துரைப்பாக்கத்தில் பதுங்கியிருப்பதாக ரவுடிகள் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் நேற்று (டிச.16) இரவு துரைப்பாக்கம் சென்ற காவல் துறையினர், அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த டொக்கன் ராஜாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட டொக்கன் ராஜாவை ரவுடிகள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து காவல் துறையினரின் விசாரணைக்குப் பின், டொக்கன் ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டுள்ள டொக்கன் ராஜா, பிரபல ரவுடியும் கூலிப்படை கும்பலின் தலைவனுமான சிடி மணியின் கூட்டாளிகளுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பள்ளி மாணவனை சாதி பெயர் சொல்லி அடித்த பெண்கள் - அரசின் நடவடிக்கை என்ன?