தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது: அதன் பின்னணி என்ன?

இரு சாதியினர் இடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி, வாட்ஸ்அப்பில் ஆடியோ வெளியிட்டு பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி, துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டான்.

சென்னையில் பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
சென்னையில் பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது

By

Published : Jul 18, 2021, 6:22 PM IST

சென்னை:திருநெல்வேலி மாவட்டத்தின் பங்களா சுரண்டை வேதக்கோயில் தெருவைச் சேர்ந்தவர், பிரபல ரவுடி கோழி அருள்ராஜ் (47).

இவர் மீது பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 23 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த காண்டிராக்டர் கண்ணன் (35), கடந்த 12ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.

வாட்ஸ்அப் ஆடியோ வெளியீடு

இதில் வழக்கில் தொடர்பற்ற போலிக் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்ததாகவும், உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் கூறி அருள்ராஜ் வாட்ஸ்அப்பில் ஆடியோ வெளியிட்டார். அதில் இரண்டு சாதியினர் இடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி, கொலை மிரட்டலும் விடுத்திருந்தார்.

கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி கோழி அருள்ராஜ்

கைது செய்ய உத்தரவிட்ட காவல் கண்காணிப்பாளர்

இதனால் அருள்ராஜைக் கைது செய்யும்படி திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் சென்னை அருகே அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் அருள்ராஜ் பதுங்கி இருப்பதை, அலைபேசி சிக்னல் வழியாக காவல் துறையினர் கண்டறிந்தனர்.

துப்பாக்கி முனையில் கைது

இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் காதர் தலைமையிலான தனிப்படையினர் சென்னை வந்தனர். பின்னர் அம்பத்தூர் காவல் உதவி ஆணையாளர் கனகராஜ் உதவியுடன், உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த ரவுடி அருள்ராஜை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு

கைது செய்யப்பட்ட அவரை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விடிய, விடிய காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதனையடுத்து இன்று (ஜூலை 18) அம்பத்தூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோழி அருள்ராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க:குறும்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டிய கணவன் - மனைவி தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details