தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் டிஜிபியின் மருமகள் கைது - முன்னாள் டிஜிபி மருமகள் கைது

சென்னையில் ஓய்வுபெற்ற முன்னாள் டிஜிபி திலகவதியின் மருமகளை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 29, 2022, 5:45 PM IST

சென்னை: கே.கே. நகரில் வசித்து வருபவர் பிரபுதிலக். ஓய்வுபெற்ற முன்னாள் டிஜிபி திலகவதியின் மகனான இவருக்கு கடந்த 2007ஆம் ஆண்டு சேலத்தைச் சேர்ந்த ஸ்ருதி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பிரபுவுக்கு ஒரு கோடி ரூபாய், 170 சவரன் நகையை வரதட்சணையாக ஸ்ருதி குடும்பத்தார் வழங்கியுள்ளனர். இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பிரபு திலக்கிற்கு சேலத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் இந்திரா பிரியதர்ஷினி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்தாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஏற்கனவே சேலம் மாநகரக காவல் ஆணையர் அலுவலகத்தில் ஸ்ருதி புகார் அளித்ததுடன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி பிரபுவும், அவரது பெண் தோழி பிரியதர்ஷினியும், திருமங்கலத்தில் உள்ள பிரபல மாலுக்குச் சென்று அங்கிருந்த உணவகம் ஒன்றில் உணவு அருந்தி கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

அப்போது, அங்கு தனது குழந்தைகள் மற்றும் தாய், தந்தையுடன் வந்த ஸ்ருதி தனது கணவர் அவரது பெண் தோழியுடன் பேசி கொண்டிருந்ததை பார்த்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பிரியதர்ஷினிக்கும், ஸ்ருதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ஸ்ருதி, அவரது குடும்பத்தினர், மருத்துவர் இணைந்து பிரியதர்ஷினியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த பிரியதர்ஷினி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் இது குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே ஸ்ருதியும் - பிரியதர்ஷினி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இருவரது புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

பின்னர், சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்ததில், ஸ்ருதி அவரது குடும்பத்தினர் சேர்ந்து பிரியதர்சினியை தாக்கியது பதிவாகி இருந்தது. இதனையடுத்து ஸ்ருதி அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 3 பேர் மீது பெண் வன்கொடுமை, கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல், தாக்குதல், உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று ஸ்ருதியை கைது செய்தனர்.

இதையும் படிங்க:சென்னையில் காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

ABOUT THE AUTHOR

...view details