தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி நகையை அடகுவைத்து பண மோசடி: இளைஞர் கைது!

சென்னை: ஆவடி அருகே அடகுக் கடையில் போலி நகை கொடுத்து பண மோசடி செய்த இளைஞரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

திருட்டு
திருட்டு

By

Published : Sep 14, 2020, 12:33 PM IST

சென்னை ஆவடி அடுத்த மோரை, ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் சுனில்லால் (46). இவர், இதே பகுதி கன்னியம்மன் நகரில் அடகுக் கடை நடத்திவருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி சுனில்லால் கடைக்கு வந்த ஒரு இளைஞர், 4 கிராம் மோதிரத்தை அடகு வைத்துவிட்டு ரூ.12 ஆயிரம் வாங்கிச் சென்றுள்ளார். அந்த நபர் சென்ற பிறகு சுனில்லால் நகையை சோதனை செய்துள்ளார்.

அப்போது, அந்த நகை தங்க முலாம் பூசிய போலியானது எனத் தெரியவந்தது. இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து காவல் ஆய்வாளர் நடராஜ் தலைமையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா மூலம் அந்த இளைஞரைத் தேடிவந்தனர்.

இந்நிலையில், அடகுக் கடையில் மோசடி செய்த இளைஞர் கிழக்கு தாம்பரம், காந்தி நகரைச் சேர்ந்த கண்ணன் (38) என்பது தெரியவந்தது. இதன் பிறகு, தலைமறைவாக இருந்த அவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

விசாரணையில், அவர்மீது கிண்டி, வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட இடங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதன் பிறகு, காவல் துறையினர் கண்ணனை அம்பத்தூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தொடர் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details