தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்தைத் தாண்டிய உறவு: காவலாளி ஓட ஓட வெட்டிப் படுகொலை - extramarital affair has caused a stir

சென்னை: திருமணத்தைத் தாண்டிய உறவால் ஓட ஓட காவலாளி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

extramarital-affair-has-caused-a-stir-security-guard-was-hacked-to-death
extramarital-affair-has-caused-a-stir-security-guard-was-hacked-to-death

By

Published : Jul 27, 2020, 10:19 PM IST

சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி (46). தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார். மேற்கு சைதாப்பேட்டை பழைய மாம்பலம் சாலையைச் சேர்ந்த செல்வி என்பவருடன் முனியாண்டிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த இருவரும் மேற்கு சைதாப்பேட்டையிலேயே ஒன்றாக கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தனர். இது செல்வியின் மகனான வேலாயுதத்திற்குப் பிடிக்கவில்லை. இதனால் அடிக்கடி முனியாண்டியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று இரவும் (ஜூலை 27) சண்டை நடந்துள்ளது. அப்போது வேலாயுதம் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து வீட்டில் இருந்த முனியாண்டியை கத்தியால் குத்தினார். பின்னர் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முனியாண்டி தெருவில் ஓட, வேலாயுதம் தனது நண்பர்களுடன் சேர்ந்து, அவரைத் துரத்தி துரத்தி வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதையடுத்து தகவலறிந்து குமரன் நகர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து முனியாண்டியின் உடலை உடற்கூறாய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தக் கொலையில் தொடர்புடைய வேலாயுதம் மற்றும் அவரின் நண்பர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு: 4 பேர் போக்சோவில் கைது!

ABOUT THE AUTHOR

...view details