தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், முன்பதிவு செய்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்ற நிலையில், தீபாவளி சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்து காத்திருப்புப் பட்டியலில் இருப்பவர்களுக்காக ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூரிலிருந்து செங்கோட்டை செல்லும் வாராந்திர சிறப்பு ரயிலில் (Train No. 06181) நான்கு படுக்கை வசதிகள் கொண்ட ஸ்லீப்பர் கோச்சுகள் இணைக்கப்பட்டுள்ளன. எழும்பூரிலிருந்து கொல்லம் செல்லும் சிறப்பு ரயிலில் (Train No. 06723) மேலும் ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சென்னை எழும்பூர்-நாகர்கோவில் வார இருமுறை செல்லும் சிறப்பு ரயிலிலும் (Train No. 060636), எழும்பூர்- குமரி செல்லும் (Train No. 02633 / 02634), எழும்பூர் தூத்துக்குடி சிறப்பு ரயிலிலும் (Train No. 02693 / 02694), எழும்பூர்- திருநெல்வேலி சிறப்பு ரயிலிலும் (Train No. 02631), எழும்பூர்- செங்கோட்டை சிறப்பு ரயிலிலும் (Train No. 02661), தஞ்சாவூர்- சென்னை எழும்பூர் சிறப்பு ரயிலிலும் (Train No. 06866) தலா ஒரு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், எழும்பூரிலிருந்து, காரைக்குடி செல்லும் சிறப்பு ரயிலில் (Train No. 02605) ஒரு இரண்டாம் வகுப்பு அமரும் வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இன்று (நவ.12) முதல் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.