தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு

ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவினை நீட்டிக்குமாறு கோரிக்கைகள் எழுந்த நிலையில், இன்று (ஏப்.18) முதல் 26 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால நீடிப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால நீடிப்பு

By

Published : Apr 18, 2022, 1:24 PM IST

சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நேற்று (ஏப்.17) செய்தியாளர்களிடம் பேசிய போது, "ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து முதலமைச்சரின் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

எனவே அதுகுறித்து முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். இந்தநிலையில், இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 எழுதுவதற்கான அறிவிப்பு மார்ச் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை பெறப்பட்டுள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவினை நீட்டிக்குமாறு கோரிக்கைகள் தொடர்ந்து பெறப்பட்டன. அதன் அடிப்படையில் ஏப்ரல் 18 முதல் 26 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது" என அதில் கூறியுள்ளார்.

இதனிடையே, பி.எட் பட்டப்படிப்புக்கான முதலாம் ஆண்டு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் அவர்களாலும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை எனவும், சர்வர் பிரச்சினை, கால அவகாசம் போதுமானதாக இல்லை எனவும் தேர்வர்கள் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதுவதற்கு இதுவரையில் 4 லட்சத்து 28ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். கடைசி 2 நாள்களில் அதிகளவில் விண்ணப்பம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 7 லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருந்தனர்.

இதையும் படிங்க: 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கோடை விடுமுறை : அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய விளக்கம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details