தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்.28ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்.28 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 15, 2023, 10:34 PM IST

சென்னை: மின்சாரத்துறையில் உள்ள முறைகேடுகளை சீரமைப்பதற்காக மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. மேலும், இதன் மூலம் மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் முடியும் என மின்சார வாரியம் மற்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதற்கானப் பணிகளை கடந்த ஆண்டு நவ.15ஆம் தேதி மின் வாரியம் தொடங்கியது. இதற்காக 2000க்கும் மேற்பட்ட சேவை மையங்கள் அமைக்கப்பட்டன. ஏற்கனவே இரண்டு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக பிப்.28ஆம் தேதி வரை இணைக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க பிப்.28ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. 2.60 கோடி மின் நுகர்வோர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

7 லட்சம் பேர் இன்னும் இணைக்கவில்லை. பிப்.28ஆம் தேதிக்கு மேல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது" என கூறினார். காலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை மாலைக்குள் இணைக்க வேண்டும் எனக் கூறியிருந்த நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"தேர்தல் விதிமீறல் குறித்து ஆதாரத்துடன் புகாரளித்தால் உடனே நடவடிக்கை" - சத்யபிரதா சாகு!

ABOUT THE AUTHOR

...view details