தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுளை 31ஆம் தேதிவரை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

thami
thami

By

Published : Jul 18, 2021, 12:19 AM IST

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 31-7-2021 காலை 6.00 மணிவரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.

* மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக)
* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து
* திரையரங்குகள்
* அனைத்து மதுக்கூடங்கள்
* நீச்சல் குளங்கள்
* பள்ளி மற்றும் கல்லூரிகள்
* உயிரியல் பூங்காக்கள்
* பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள் பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
* இறுதிச்சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
* நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
* தொழிற் பயிற்சி பெறும் மாணவர்களின் வேலைவாய்ப்பினைக் கருத்தில் கொண்டு அனைத்து தொழிற் பயிற்சி நிலையங்கள் (ITIs and Industrial Schools), தட்டச்சு-சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவிகித மாணவர்களுடன், சுழற்சி முறையில் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.

* மேலும் அனைத்து கடைகளும் காலை 6 முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details