தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலவச லேப்டாப்கள் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி!

மாற்றுத்திறனாளி மாணவ- மாணவியருக்கு அரசின் இலவச லேப்டாப்கள் வழங்க கோரிய வழக்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலவச லேப்டாப்கள் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி
இலவச லேப்டாப்கள் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி

By

Published : Mar 21, 2022, 1:37 PM IST

சென்னை:சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் தாக்கல் செய்த மனுவில், "தமிழ்நாடு அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு இலவச லேப்டாப்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

கடந்த 2020 - 21 ஆம் கல்வியாண்டில் 5 லட்சத்து 32 ஆயிரம் லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாற்றுத்திறனாளி மாணவ - மாணவியருக்கு லேப்டாப்கள் வழங்கப்படவில்லை.

அதனால் மாற்றுத்திறனாளி மாணவ - மாணவியருக்கு இலவச லேப்டாப்கள் வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாற்றுத்திறனாளி மாணவ - மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் தாக்கல் செய்யவில்லை எனக் கூறிய நீதிபதிகள், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாக எச்சரித்தனர்.

இதையடுத்து மனுவை திரும்பப் பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:நான் கூறியதை தற்போது வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.. உதயநிதி ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details