தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாய்- மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்! - குற்றச் செய்திகள்

தாய்- மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த பாஜக பிரமுகர், கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

போக்சோ
போக்சோ

By

Published : Aug 5, 2021, 4:27 PM IST

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு பெரம்பூர் மேற்கு மண்டல தலைவர் பார்த்தசாரதி. இவர் மீது தாய்- மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பார்த்தசாரதியை காவல்துறையினர் தேடி வந்தனர். தற்போது இது குறித்து பாஜக வட சென்னை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ராஜேந்திர பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தேடப்பட்டு வரும் பாஜக பிரமுகர் பார்த்தசாரதி

அதில், ”கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்து, காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் கட்சி பொறுப்பிலிருந்து பார்த்தசாரதி நீக்கப்படுகிறார்.

மேலும் கட்சி பொறுப்பில் இருப்பதாகக் கூறி செயல்பட்டால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தேவாலய இடத்தில் பிள்ளையார் சிலை... இரு தரப்பினருடைய ஏற்பட்ட மோதலால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details