தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மே 26இல் தொடக்கம்! - Exam news

சென்னை: தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 12 ,11, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் மே 27ஆம் தேதி தொடங்கி ஜூன் 23ஆம் தேதிவரை நடத்துவதற்கு அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்
பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்

By

Published : May 12, 2020, 4:55 PM IST


தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு மார்ச் மாதம் 2-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24-ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அன்று நடைபெற்ற தேர்வினை சுமார் 36 ஆயிரத்து 84 மாணவர்கள் எழுதவில்லை. அந்த மாணவர்களுக்கான மறுதேர்வு ஜூன் மாதம் 4ஆம் தேதி நடைபெறுகிறது.

அதேபோல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், 26-ஆம் தேதி நடைபெவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

அந்தத் தேர்வுகள் ஜூன் 2-ஆம் தேதி நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை 10 வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேர்வுகள் ஜூன் 1-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் மாணவர்களுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணியை அரசு தேர்வுத் துறை தீவிரமாக மேற்கொள்ள உள்ளது. கடந்தாண்டு வரை தமிழ்நாடு முழுவதும் சுமார் 70 மையங்களில் திருத்தப்பட்ட விடைத்தாள்கள் இந்தாண்டு இரண்டு மடங்காக மையங்களின் எண்ணிக்கை அதிகரித்து திருத்துவதற்கு அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

மேலும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தயார் செய்யத் திட்டமிட்டுள்ளது. 11், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிந்த விடைத்தாள்கள் விடைத்தாள் பாதுகாப்பு மையங்களில் இருந்து வரும் 19ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.

அங்கு 20, 21ஆம் தேதிகளில் விடைத்தாள்கள் பிரிக்கப்பட்டு விடைத்தாள் திருத்தும் மண்டலங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. மண்டலங்களிலிருந்து 22, 23ஆம் தேதிகளில் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து விடைத்தாள்களை முதன்மை விடைத்தாள் திருத்துபவர்கள் 27-ஆம் தேதி திருத்தவுள்ளனர்.

28-ஆம் தேதி முதல் உதவி விடைத்தாள் திருத்துபவர்கள் திருத்தும் பணியை மேற்கொள்கின்றனர். ஜூன் 7-ஆம் தேதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் 10-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் தயார் செய்யப்படவுள்ளது. ஜூன் 20-ஆம் தேதிக்கு முன் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட அரசு தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள்களை ஜூன் மாதம் 15-ஆம் தேதி திருத்தும் பணி தொடங்கிவிட்டனர். ஜூன் மாதம் 23-ஆம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, பண மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி ஜூன் மாதம் 24-ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 4-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஜூலை மாதம் 10-ஆம் தேதிக்குள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுத் துறை தெரிவிக்கிறது. மேலும், விடைத்தாள் திருத்தும் மையங்களில் தேவையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரவும் தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details