தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்எல்ஏக்கள் ஓய்வூதிய உயர்வு மசோதா நிறைவேற்றம்! - முதலமைச்சர் ஸ்டாலின்

ஓய்வு பெற்ற சட்டப்பேரவை, சட்டமேலவை உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.

ஓய்வூதிய உயர்வு மசோதா
ஓய்வூதிய உயர்வு மசோதா

By

Published : Sep 13, 2021, 5:10 PM IST

சென்னை:ஓய்வு பெற்ற சட்டப்பேரவை, சட்டமேலவை உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, சட்டப்பேரவையில் இன்று (செப்.13) தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது.

முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்த மசோதாவில், "சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக் காலத்தில் உயிரிழக்கும்போது அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை இரண்டு லட்சம் ரூபாயிலிருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

சட்டப்பேரவை, சட்டமேலவை முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த காலங்களில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டும் செயல்படுத்தப்படவில்லை, அதனால் இன்று சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உயிர் கொல்லியாக மாறும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details