தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அறிவாலயத்தில் அமமுக முக்கிய நிர்வாகி ஞானசேகரன்! - ஸ்டாலின்

சென்னை: அமமுக மாநில அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஞானசேகரன் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளார்.

niyanam

By

Published : Jul 15, 2019, 10:20 AM IST

நாடாளுமன்றம், சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆகியவற்றுக்குப் பின்னர் அமமுக முக்கிய நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுக, திமுகவில் இணைந்து வருகின்றனர்.

அந்த வகையில், அமமுக மாநில அமைப்புச் செயலாளரும், வேலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஞானசேகரன் திமுகவில் இணைவதற்காக இன்று அண்ணா அறிவாலயம் வந்துள்ளார்.

அறிவாலயத்தில் அமமுக முக்கிய நிர்வாகி ஞானசேகரன்!

இன்னும் சற்று நேரத்தில் இவர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைய இருக்கிறார். இவருடன் வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடன் வந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details