சென்னை: பெரியாரின் 143ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா, கட்சியின் முக்கியநிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் ஜெயக்குமார் செய்தியாளரிடம் பேசுகையில்,
“பெரியாரின் புகழைப் போற்றும்விதமாக, அதிமுக இட ஒதுக்கீடு முதல் அனைத்திலும் அவர் கொள்கைப்படியே நடக்கின்றது.
பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி வெண்சாமரம் வீசும் தோழமைக் கட்சிகள்
நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ஆலோசனை மையத்தை முன்கூட்டியே ஏற்படுத்தியிருக்க வேண்டும். தேர்விற்குத் தயாராகாத சூழலில் தோல்வி பயத்தில்தான் மாணவர் தனுஷ் உள்பட மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதிமுகவைப் பொறுத்தவரை ஏற்கனவே சட்டப்பேரவைத் தேர்தலில் நீடித்த கூட்டணியே தொடர்கிறது. இதில் பாமக மட்டும் தனித்து போட்டியிடுகிறது. தேவைப்படும்போது ஆளுநரைத் தூக்கிவைத்துக் கொண்டாடுபவர்கள் திமுகவினர்.
நீட் பிரச்சினைகளுக்கெல்லாம் வாய் திறக்காத திமுக தோழமைக் கட்சிகள், ஆளுநர் நியமனத்திற்கு மட்டும் வாய் திறப்பது, யார் சொல்லி செய்யும் செயல்? திமுக தோழமை கட்சிகள் வெண் சாமரம் வீசுகிறார்கள். இதனை பயத்தின் உச்சம் என்றுதான் கூற வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:பிரதமர் மோடி பிறந்த நாள்: ஸ்டாலின், இபிஎஸ் வாழ்த்து