தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு கிழக்கு வெற்றி - அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கொண்டாட்டம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதால், அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

கிழக்கு
கிழக்கு

By

Published : Mar 2, 2023, 6:19 PM IST

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில், திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலை முதலே முன்னிலை வகித்து வந்தார். மாலையில், 15வது மற்றும் இறுதிச்சுற்று நிலவரப்படி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதால், காங்கிரஸ் மற்றும் திமுகவினர் இதனை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அண்ணா அறிவாலய வளாகத்தில் குவிந்த திமுக தொண்டர்கள், பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். பின்னர் மேளதாளம் கொண்டு வரப்பட்டு, பெண்கள் உட்பட அனைவரும் நடனமாடி உற்சாகமாக வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது "கலைஞர் வாழ்க, நிரந்தர முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்க" என கோஷமிட்டு ஆர்ப்பரித்தனர்.

பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்திற்கு வந்த நிலையில், அவரை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பினர். முதலமைச்சருக்கு ஏராளமானோர் சால்வைகள் அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நேற்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளில் அண்ணா அறிவாலயம் விழாக்கோலம் பூண்டிருந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் இடைத்தேர்தல் வெற்றியால் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ‘திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி’ -முதலமைச்சர் பூரிப்பு

ABOUT THE AUTHOR

...view details