தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக மாநாடு ஒரு புளியோதரை மாநாடு - ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ விமர்சனம் - EVKS Elangovan Slams TN Gov RN Ravi

Madurai AIADMK conference: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுந்தது மனதுக்கு வருத்தமளிப்பதாகவும், அதிமுக மாநாட்டை புளியோதரை மாநாடு எனவும் ஆளுநர் ரவிக்கு தலை முதல் பாதம் வரை கொலஸ்ட்ரால் எனவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

ஆளுநரை கடுமையாக விமர்சித்த ஈவிகேஎஸ்
ஆளுநரை கடுமையாக விமர்சித்த ஈவிகேஎஸ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 10:42 PM IST

Updated : Aug 23, 2023, 10:59 PM IST

ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ கடும் விமர்சனம்

ஈரோடு:நடிகர் ரஜினி உத்திரபிரதேச முதல்வர் காலில் விழுந்தது, மனதுக்கு வருத்தமளிக்கிறது என ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் அவரது இல்லத்தில் இன்று (ஆக.23) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "இந்தியாவில் சாலைகள் போடும் திட்டத்தில் ரூ.3 லட்சம் கோடி லஞ்சமாக மோடி பெற்றுள்ளதாகவும், இறந்துபோனவர்களின் பெயர்களை பயன்படுத்தி பல காப்பீட்டு அவர் பெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

கிண்டியில் இருந்து கீழ்பாக்கம் செல்வார் ஆளுநர்:ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தலையில் இருந்து பாதம் வரை கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதாகவும், தமிழக அரசுக்கு அவர் தேவையில்லாத இடையூறுகள் செய்வதாகவும் குற்றம்சாட்டினார். திமுகவினர் உணர்ச்சி அதிகமம் உள்ளவர்கள் எனவும், ஆளுநரை மக்கள் விரைவில் ஊரைவிட்டு அனுப்பும் சூழலும் வரும் எனவும் கூறினார். சட்டபேரவையில் என்ன கோப்பு கொடுக்கிறோமோ, அதில் கையெழுத்து மட்டும் போட வேண்டியதுதான் ஆளுநரின் வேலை என்றும்; ஆனால், அதை தவிர்த்து மற்ற எல்லா வேலைகளிலும் அவர் ஈடுபடுவதாக குறை கூறினார். மேலும், விரைவில் ஆளுநர் ரவியை கிண்டியில் இருந்து கீழ்பாக்கத்தில் சேர்க்கும் நிலை ஏற்படும் என்றும் சாடினார்.

டிஎன்பிசி-க்கு தலைவராக சைலேந்திர பாபு நியமனத்திற்கு ஆளுநர் தடையாக இருப்பதாகவும், ஆளுநர் ரவி மீது தமிழக மக்களுக்கு அலாதி கோபம் இருப்பதாகவும் கூறினார். சைலேந்திரபாபு நல்ல அதிகாரியாக இருந்தவர் என்றும் அண்ணாமலையை பொறுத்த வரையில் வாயை திறந்தாலே பொய்தான் சொல்வதாகவும் சாடிய அவர், அவர் ஒன்னும் பாதயாத்திரை போகாமல், வாகன யாத்திரை செல்வதாக விமர்சித்தார். மேலும், இந்த பாதயாத்திரை முடிந்த பின்னர் அவர் காணாமல் போய்விடுவார் எனக் கூறினார்.

நடிகர் ரஜினியின் செயலால் அதிர்ச்சி:மேலும் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், 'நடிகர் ரஜினி உத்திரபிரதேச முதல்வர் காலில் விழுந்தது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. அவர்மீது ஏற்கனவே 7 கிரிமினல் வழக்கு இருந்தது. அவர் காலில் நடிகர் ரஜினி விழுந்தது மிகுந்த மன வருத்தத்தை அழிக்கிறது என்றார்.

காவேரி நதிநீர் பிரச்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவார் என எதிர்பார்ப்பதாகவும், தற்போது 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதிமுக மாநாடு; புளியோதரை மாநாடு:நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டு வந்தபோது, நீட் தேர்வு (NEET Exam) எந்த மாநிலங்களுக்கு வேண்டுமோ? அந்தந்த மாநிலங்கள் வேண்டுமென்றால் அமல்படுத்தி கொள்ளலாம் என்று கூறியது. ஆனால், தற்போது மத்தியில் ஆளும் பாஜகவோ, அனைத்து மாநிலமும் செயல்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வை கட்டாயமாக்குகிறது என்பதை தெரிந்துகொண்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசி இருக்க வேண்டும்.

மதுரையில் நடைபெற்ற 'அதிமுக மாநாடு' என்பது 15 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறுகின்றனர். ஆனால், 50 ஆயிரம் பேர்தான் கலந்து கொண்ட நிலையில், அங்கு கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளது. 5 மணி நேரம் கூட கூட்டம் நடைபெறவில்லை. இது ஒரு புளியோதரை மாநாடாக பார்க்கிறேன்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க:கர்நாடகாவின் நலனை பாதுகாப்பதில் சமரசத்துக்கு இடமில்லை - டி.கே.சிவகுமார்

Last Updated : Aug 23, 2023, 10:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details