தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - இன்றைய நிகழ்வுகள்

இன்றைய முக்கியச் செய்திகள், நிகழ்வுகள் குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தில் சுருக்கமாக காணலாம்.

ETVBharatNewsToday
ETVBharatNewsToday

By

Published : Mar 7, 2021, 7:38 AM IST

Updated : Mar 7, 2021, 8:52 AM IST

திமுக - காங்கிரஸ் தொகுதி உடன்படிக்கை

திமுக - காங்கிரஸ் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு இறுதிச்செய்யப்பட்டுவிட்ட நிலையில், தொகுதி உடன்படிக்கை இன்று காலை 10 மணிக்கு கையெழுத்தாக இருக்கிறது.

திமுக - காங்கிரஸ் தொகுதி உடன்படிக்கை

கன்னியாகுமரியில் அமித்ஷா பரப்புரை

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பரப்புரை மேற்கொள்கிறார்.

அமித் ஷா

திருச்சியில் திமுக பொதுக்கூட்டம்

திருச்சியை அடுத்த சிறுகனூரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அடுத்த பத்தாண்டுக்கான தொலைநோக்கு திட்டம் குறித்த லட்சிய பிரகடனத்தை இன்று வெளியிடுகிறார்.

ஸ்டாலின்

மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி பரப்புரை

ஐந்து மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவை வலுப்படுத்த பிரதமர் மோடி மேற்குவங்கத்தில் இன்று பரப்புரை மேற்கொள்கிறார்.

பிரதமர் மோடி

விடுமுறை நாளிலும் கரோனா தடுப்பூசி

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளதால், வார விடுமுறை தினமான இன்றும் கரோனா தடுப்பூசி மையங்கள் வழக்கம்போல் செயல்படும். விருப்பமுள்ளவர்கள் போட்டுக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா
Last Updated : Mar 7, 2021, 8:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details