அதிமுக - அமமுக விருப்ப மனு விநியோகம்!
அதிமுக விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அளிக்க இன்றே கடைசி நாள். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளோர் விருப்ப மனுக்களை இன்று முதல் மார்ச் 10ஆம் தேதி வரை வழங்கலாம் என அமமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அதிமுக - அமமுக விருப்ப மனு விநியோகம்! அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம்!
தூத்துக்குடியில் இன்று சமக மாநில பொதுக்குழுக் கூட்டம், மூன்றாவது அணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம்! புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு!
புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் பள்ளிகள் முழு நேரமும் இயங்கவுள்ளதாக கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு! கரோனா பரிசோதனை இலவசம் - கேரள அரசு அறிவிப்பு!
வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இன்றிலிருந்து இலவச கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறியுள்ளார்.
கரோனா பரிசோதனை இலவசம் - கேரள அரசு அறிவிப்பு! பாக்சம் குத்துச் சண்டை !
ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், இத்தாலி நாட்டின் கியோர்டானா சொரன்டினோவை எதிர்த்து 51 கிலோ எடை பிரிவில் விளையாடுகிறார்.