தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - தமிழ்நாடு செய்திகள்

ஈடிவி பாரத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், நிகழ்வுகள் குறித்து சுருக்கமாக காணலாம்.

நியூஸ் டுடே
நியூஸ் டுடே

By

Published : Nov 2, 2020, 7:34 AM IST

இன்று முதல் கோயம்பேட்டில் மீண்டும் செயல்பட உள்ள பழக்கடை மொத்த வியாபாரம்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு சந்தை கடந்த மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்டது. இங்கு செயல்பட்டு வந்த காய்கறி சந்தை கடந்த மே மாதம் முதல் திருமழிசையிலும், பழச்சந்தை மாதவரம் பேருந்து நிலையத்திலும் செயல்படத் தொடங்கியது.

இந்நிலையில் இன்று நவம்பர் 2ஆம் தேதி முதல் கோயம்பேட்டில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் வரும் நவம்பர் 16ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி சந்தைகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு

மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

கரோனா பரவல் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தொடர் விடுமுறையை ஒட்டி அக்டோபர் 29ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் நேரம் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக இன்று (நவ.02) முதல் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை ரயில்கள் இயக்கப்ப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்

ஆந்திராவில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு

கரோனா பாதிப்புகள் குறைந்த மாநிலங்களில் மாநில அரசுகள் தங்களது விருப்பத்திற்கேற்ப பள்ளிகளைத் திறக்கலாம் என மத்திய அரசு முன்னதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று முதல் ஆந்திர மாநிலத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்தது. அதன்படி 9,10,11,12ஆம் வகுப்புகள் பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. நவம்பர் 24ஆம் தேதி முதல் 6,7,8ஆம் வகுப்பு மானவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. அரை நாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவிகள்

புதிய ஸ்மார்ட் வாட்ட்சை அறிமுகப்படுத்தும் ரியல்மீ

ரியல்மீ நிறுவனம் தனது முதல் வாட்சை கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் ரியல்மி வாட்ச் எஸ் என்றழைக்கப்படும் ஸ்மார்ட் வாட்சை அந்நிறுவனம் இன்று அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வாட்ச் முதலில் பாகிஸ்தான் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், வெவ்வேறு பேஸ்கள், ஸ்ட்ராப் விருப்பங்களையும், இதயத் துடிப்பு, ரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் சென்சார்களையும் இந்த வாட்ச் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மீ

இன்றைய ஐபிஎல் போட்டி :

ஐபிஎல் 2020 லீக்கின் 55ஆவது ஆட்டத்தில் இன்று மாலை 7.30 மணியளவில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி அபுதாபியில் நடைபெற உள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

55ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் கிங் கான் :

கிங் கான்

’கிங் கான்’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு, இந்தியாவின் முகங்களில் ஒன்றாக விளங்கி, உலகம் முழுவதும் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், இன்று (நவ.02) தனது 55ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஷாருக்கின் வீட்டின் முன்பு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதை வழக்கம். இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் ஆன்லைனில் அவரது பிறந்தநாளை கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details