தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 16, 2021, 9:19 AM IST

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9AM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்...

9AM
9AM

1.குழந்தைகளுக்கு நிதி வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்!

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜுன்.16) தொடங்கி வைக்கிறார்.

2.டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று(ஜுன்.16) தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 6 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

3.மோடியைச் சந்திக்க ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட பின்னர் முதன்முறையாக, பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனி விமானம்மூலம் டெல்லி புறப்படுகிறார்.

4.’பப்ஜி’ மதன் மீது அதிகரிக்கும் ஆன்லைன் புகார்கள்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுமா?

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 159 ஆன்லைன் புகார்கள் பப்ஜி மதன் மீது வந்துள்ளதாகத் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது. இதனால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

5.இது எங்கள் ஆட்சி என்ன செய்கிறேன் பார் - போலீசை மிரட்டும் திமுக வட்டச் செயலாளர்

சென்னை: வழிப்பறிச் சம்பவத்தில் கைதான 5 பேருக்கு ஆதரவாக திமுக வட்டச் செயலாளர் ராஜேந்திரன் என காவல் துறையினரை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6.பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்க அணையில் பழுதடைந்த ஷட்டர்கள் சரிபார்ப்பு

சென்னை: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்க அணையில் உள்ள பழுதடைந்த ஷட்டர்களை பொதுப்பணித்துறையினர் சரி செய்தனர்.

7.மாஞ்சா கயிற்றால் விபரீதம்: கழுத்தில் நூல் அறுத்து காயம்

இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் கழுத்தில், எங்கிருந்தோ வந்த மாஞ்சா கயிறு அறுத்து காயம் ஏற்பட்டது.

8. 2024 மக்களவைத் தேர்தல்: வேலையை ஆரம்பித்த பாஜக!

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற வேண்டுமானால், இப்போது தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை பிரதமர் நரேந்திர மோடி உணர்ந்துள்ளனர்.
9.’தமிழ்நாடு முதலமைச்சர், டிஜிபிக்கு நன்றி’ - ரவீந்தர் சந்திரசேகர்

விஐபி-களின் பாதுகாப்புப் பணியிலிருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்து உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டிஜிபி திரிபாதி ஆகியோருக்கு லிப்ரா புரொடக்ஷன்ஸ் உரிமையாளர் ரவீந்தர் சந்திரசேகர் நன்றி தெரிவித்துள்ளார்.

10.'ஆனந்த யாழை மீட்டுகிறாள்' - மகளுடன் நடந்துசெல்லும் யுவன்

சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது மகளுடன் ஆனந்த யாழை பாடலுக்கு நடந்துசெல்லும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details