தமிழ்நாடு

tamil nadu

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jul 1, 2021, 7:25 PM IST

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7 மணி செய்தி
7 மணி செய்தி

  1. சாதிய பாகுபாடு: உதவிப் பேராசிரியர் பணி விலகலுக்கு ஐஐடி விளக்கமளிக்க மறுப்பு

சாதிய பாகுபாடு காரணமாக உதவிப் பேராசிரியர் விபின் பணியிலிருந்து வெளியேறியது குறித்து ஐஐடி நிர்வாகம் விளக்கமளிக்க மறுத்துள்ளது.

2. சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு வரும் திங்கள்கிழமைக்கு (ஜூலை 5) ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3. ஜிஎஸ்டி பொருளாதாரத்தின் மைல்கல்- பிரதமர் நரேந்திர மோடி!

இந்தியப் பொருளாதாரத்தின் மைல்கல் ஜிஎஸ்டி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அப்போது, சாமானிய மக்கள் மீதான வரிச்சுமை குறைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

4. சென்னை ஐஐடியில் தொடரும் சாதிய பாகுபாடு; பணியிலிருந்து விலகிய உதவிப் பேராசிரியர்!

சென்னை ஐஐடியில் உதவிப் பேராசிரியரான விபின் பி. வீட்டில், அங்கு நிலவும் சாதி ரீதியான பாகுபாட்டினை சுட்டிக்காட்டி சென்னை ஐஐடியிலிருந்து வெளியேறுவதாக அதன் நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

5. திங்கள் முதல் செரோ சர்வே தொடங்கப்படும் - சென்னை மாநகராட்சி தகவல்

கரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் சென்னை முழுவதும் செரோ சர்வேவிற்காக திங்கள் முதல் மாதிரிகள் சேகரிக்கப்படும் என சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

6. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு முடித்துவைப்பு

மதுரை ஆவின் பணி நியமனத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், அரசின் விளக்கத்தை ஏற்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளது.

7. குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்களை ஆய்வுசெய்ய உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்களை உடனடியாக ஆய்வுசெய்ய வேண்டும் எனச் சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவிட்டுள்ளார்.

8. வெள்ளுடை தேவதைகளாக வலம்வரும் மருத்துவர்கள்: புகழாரம் சூட்டிய தமிழிசை

கரோனா தொற்றிலிருந்து மற்றவர்களைப் பாதுகாக்கும் மருத்துவர்கள் தங்களையும் தற்காத்துக்கொள்ள வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.

9. சாதித்த வலிமை- சென்னையில் பீஸ்ட்!

அதிரடி காட்டிய பீஸ்ட், சப்தமில்லாமல் சாதித்த வலிமை என சமூக வலைதளத்தில் அஜித், விஜய் ரசிகர்கள் மறுபடியும் மோதிக்கொள்கின்றனர்.

10. அண்ணாத்த: 25 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளி ரேஸில் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ’அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details