தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திகள் - TOP 10 NEWS @ 7AM - 7AM news

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்...

7AM
7AM

By

Published : Jun 23, 2021, 7:03 AM IST

1. 'குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை'

விருதுநகர்: சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் ஐந்து வயது குழந்தை உயிரிழந்த இடத்தை தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார்.

2. நொளம்பூரில் கைகள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு!

சென்னை நொளம்பூர் பகுதியில் கைகள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

3. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமித்தல் - பரிசீலிக்க உத்தரவு

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதை பரிசீலிக்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

4. வேலூர் எஸ்பி அலுவலகம் முன்பு மூதாட்டி குடும்பத்துடன் உண்ணாவிரதம்

வாழ்வாதாரத்திற்கு வழிசெய்ய வேண்டி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன்பு மூதாட்டி ஒருவர் அவரது குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

5. கோவாக்சின் 2ஆம் தவணை செலுத்துவோருக்கு சிறப்பு முகாம் - சென்னை மாநகராட்சி

கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்துவோருக்கு சிறப்பு முகாமினை சென்னை பெருநகர மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது

6.பப்ஜி மதனின் இன்ஸ்டாகிராம் மூலம் காவல் துறையினர் எச்சரிக்கை!

பப்ஜி மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம், அதனை பின்தொடர்பவர்களுக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் துறையினர் எச்சரிக்கைப் பதிவை விடுத்துள்ளனர்.

7. அமைச்சரவை விரிவாக்கம் குறித்த முடிவை பிரதமர் எடுப்பார் - நிதிஷ் குமார்

ஒன்றிய அமைச்சரவையில் விரிவாக்கம் தொடர்பான முடிவை பிரதமர் நரேந்திர மோடியே மேற்கொள்வார் என பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

8.ஜூன் 25 முதல் ஓடிடி தளத்தில் ‘மேதகு’

தமிழீழ விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் இளமைக் கால வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

9. இன்றைய ராசிபலன் - ஜூன் 23

நேயர்களே, ஜூன் 23ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

10. யூரோ 2020 ரவுண்ட் அப்: பெல்ஜியம், இங்கிலாந்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்

2020 யூரோ கால்பந்து ஜூன் 21ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பெல்ஜியம், இங்கிலாந்து அணிகள் வெற்றிபெற்றன.

ABOUT THE AUTHOR

...view details