தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM - etv bharat tamil news

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்...

5PM
5PM

By

Published : Jul 7, 2021, 5:09 PM IST

1. ஒன்றிய அமைச்சராகிறார் எல். முருகன்

தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் உள்ளிட்ட 43 பேர் ஒன்றிய அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர்.

2. ஒன்றிய அமைச்சரவை எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது? அதன் பின்னணி என்ன?

ஒன்றிய அமைச்சரவையை விரிவாக்கம் செய்யவும் மாற்றியமைக்கப்படவும் உள்ளது. இதற்கான விழா இன்று (ஜூலை 7) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

3. ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் 40 சதவீத கட்டணம் வசூலிக்க உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு முன்னர் 40 சதவீத கட்டணங்களை மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

4. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு ஒற்றைச் சாளரமுறை தேவை

அரசு, அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கும் ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்த வேண்டும் என பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் காந்திராஜ் தெரிவித்தார்.

5. வைகோ மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து!

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தியதாக வைகோ மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6. ரயிலில் சிக்கியவரை மீட்ட பெண் காவலர்கள்: வைரல் வீடியோ!

சேலத்தில் எதிர்பாராதவிதமாக ரயிலுக்கும் நடைபாதைக்கும் இடையே சிக்கிய பிகார் இளைஞரை ரயில்வே பெண் காவலர்கள் துரிதமாக செயல்பட்டு மீட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வைரலாகியுள்ளன.

7.வழக்குரைஞர் டூ மத்திய அமைச்சர்- எல். முருகன் வாழ்க்கை பயணம்!

வழக்குரைஞராக வாழ்க்கையை தொடங்கிய எல். முருகன் இன்று மத்திய அமைச்சராக பொறுப்பேற்கிறார். அவரின் வாழ்க்கை பயணத்தை பார்க்கலாம்.

8. இந்தியாவின் நீண்ட நாள் விருந்தாளி நான்- தலாய் லாமா!

நான் இந்திய நாட்டின் நீண்ட நாள் விருந்தாளி எனத் திபெத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார்.

9. திலீப் குமார் மறைவு: பெரும் சோகத்தில் 'பாலிவுட் பிக் பி'

திலீப் குமாருக்கு முன், திலீப் குமாருக்கு பின் என்றுதான் இந்திய சினிமாவின் வரலாறு எழுதப்படும். அவரது மறைவு தந்த துக்கத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை என நடிகர் அமிதாப் பச்சன், திலீப் குமாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

10. இயக்குநர் ஷங்கருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி- சென்னை உயர்நீதிமன்றம்

இந்தியன் 2 திரைப்பட விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கு எதிராக தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details