தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் - Top 10 News @ 1pm - etvbharat tamil news

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்...

1 மணி செய்தி
1 மணி செய்தி

By

Published : Jun 10, 2021, 12:48 PM IST

1, ஜூன் 14-இல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஜூன் 14ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

2. பாலிடெக்னிக் தேர்வுக் கட்டணத்தை ஜுன் 14 ஆம் தேதிக்குள் செலுத்தலாம்!

சென்னை: நடப்பு பருவத் தேர்வுக்கான கட்டணம் செலுத்தும் அவகாசத்தை ஜுன் 14 ஆம் தேதி வரை நீட்டித்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

3.இந்தியாவில் தேசத் துரோக சட்டம் நீக்கப்பட வேண்டுமா - நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

சென்னை: இந்தியாவில் தேசத் துரோக சட்டம் நீக்கப்பட வேண்டுமா? வல்லுநர்களின் பதில்கள் என்ன? என்பது குறித்து விளக்கமாக இந்த சிறப்புத் தொகுப்பில் பார்க்கலாம்.

4.மருத்துவர்கள், செவிலியருக்கு தரமான உணவு மற்றும் தங்குமிட வசதி - அமைச்சர் மா.சுப்பிரமணியம்

கரோனா பேரிடர் காலத்தில் தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்து மக்கள் சேவைபுரியும் மருத்துவர்கள், செவிலியர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்குத் தரமான உணவு மற்றும் பிரசித்திபெற்ற உயர்தர விடுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடு ஆகியவை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறினார்.

5.உலகை கைக்குள் அடக்கிய தமிழனுக்கு பிறந்தநாள்!

தமிழ்நாட்டில் பிறந்து மிகப்பெரும் கணினி பொறியாளராகப் பிரபல கூகுள் நிறுவனத்தை ஆளும் சுந்தர் பிச்சைக்கு இன்று பிறந்தநாள்.

6.50 கோடி தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் அமெரிக்கா!

உலக நாடுகளுக்கு உதவுவதற்காக, 50 கோடி கரோனா தடுப்பூசிகளை பைஃசர் நிறுவனத்திடமிருந்து வாங்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

7.அமெரிக்காவில் டிக்டாக், விசாட்டிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

சீன செயலிகளான டிக்டாக், விசாட்டிற்கு ட்ரம்ப் விதித்த தடைகளை ரத்து செய்யும் ஆணையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

8.பட்ஜெட் விலையில் வெளியான போக்கோ m3 ப்ரோ 5G!

இந்திய சந்தையில் போக்கோ m3 ப்ரோ 5G ஸ்மார்ட்போன், குறைவான விலையில் கூடுதல் சிறப்பு அம்சங்களுடன் வெளியாகியுள்ளது.

9.ஜி7 மாநாடு: பிரிட்டன் பறந்த ஜோ பைடன்

ஐரோப்பாவில் 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜோ பைடன், பிரிட்டனில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கிறார்.

10.மீண்டும் அட்லி படத்தில் இணைந்த ஜெய்?

சென்னை: இயக்குநர் அட்லி தயாரிக்கும் படத்தில் நடிகர் ஜெய் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details