தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - state

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

news 9 pm
news 9 pm

By

Published : Jun 10, 2020, 8:57 PM IST

11 ஆண்டுகளாக மின்சாரமில்லாமல் 3 பிள்ளைகளுடன் இருளில் வாழும் குடும்பம்

தஞ்சாவூர்: மனித வாழ்விற்கு அடிப்படையாக உருபெற்றுள்ள மின்சாரம் 11 ஆண்டுகளாக கிடைக்காமல் ஒழுகும் குடிசையில் மூன்று பிள்ளைகளுடன் ஒரு குடும்பம் வாழ்ந்து வருகிறது. அது பற்றிய சிறப்பு தொகுப்பை காண்போம்.

'மாஸ்க் போடுங்க, கைகளை கழுவுங்க; அப்போதுதான் ஆட்டோவில் அனுமதி!'

தேனி: ஆண்டிபட்டியில் ஆட்டோவில் பிரத்யேகமாக நீர் குழாய் அமைத்து நீரையும், கிருமி நாசினியையும் கொடுத்து, பயணிகளின் கைகளை நன்றாகச் சுத்தம் செய்ய வைத்த பிறகே, பயணத்தைத் தொடங்குகிறார், மல்லிகாஅர்ச்சுனன் என்ற அசத்தல் ஆட்டோ ஓட்டுநர்.

கரோனா ஆலோசனை பெற மண்டல வாரியான தொலைப்பேசி எண்கள் அறிமுகம்!

சென்னை: மக்கள் கரோனா தொடர்பாக தகவல் பெறுவதற்காக சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக தொலைப்பேசி ஆலோசனை மையங்களின் எண்களை வெளியிட்டுள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து அரசாணை வெளியீடு!

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தலில் களமிறங்கும் முன்னாள் முதலமைச்சர்

ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் உட்பட மூன்று பேர் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

கொசுக்களை கட்டுப்படுத்த டிப்ஸ்!

மாஸ்க்குகள் அணிவதன் மூலமும் தகுந்த இடைவெளியை கடைபிடிப்பதன் மூலமும் கரோனாவிலிருந்து நம்மை நாமே தற்காத்து கொள்ள முடியும். அதேபோல், கொசு மருந்து, வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக நகராட்சி அமைப்புகளை சார்ந்து இருப்பதை தவிர்த்து, டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்களை விரட்டியடிக்க மக்கள் எளிதான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

கதை சொல்லியாக அவதாரம் எடுத்த இயக்குநர் அகத்தியனின் மகள் கனி!

இயக்குநர் திருவின் மனைவியும் தேசிய விருது வென்ற இயக்குநர் அகத்தியனின் மகளுமாகிய கனி, தனது புத்தம் புது பயணத்தை 'ஒரு ஊர்ல ஒரு ராஜா' என்ற நிகழ்ச்சி மூலம் தொடங்கியுள்ளார்.

'இரண்டு மணி நேரம்' வெப் த்ரில்லர் டீஸர் வெளியீடு!

இரண்டு மணி நேரம் '2H' (2 Hours) என்று பெயரிடப்பட்டுள்ள த்ரில்லர் வெப் சீரிஸின் டீஸர் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய-ஆப்கன் அணியை தேர்வு செய்த சஹால், ரஷீத்!

உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களான யஸ்வேந்திர சஹால் மற்றும் ரஷீத் கான் இருவரும் இணைந்து ஒருங்கிணைந்த இந்தியா - ஆப்கானிஸ்தான் அணியை தேர்வுசெய்துள்ளனர்.

கரோனா அப்டேட்: எதிர்ப்புகளுக்குப் பின் பழைய முறைக்குத் திரும்பிய பிரேசில்

பிரேசிலியா: பிரேசிலின் புதிய கரோனா கணக்கு முறைக்கு எழுந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து, பழைய முறையிலேயே கரோனா கணக்கு வெளியிடப்படும் என்று பிரேசில் அரசு அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details