தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9pm - Top 10 news @9pm

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 மணி செய்திச் சுருக்கம்
9 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jun 1, 2020, 8:51 PM IST

இரண்டாவது நாளாக ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு: முழு விவரம்

சென்னை: தமிழ்நாட்டில் இரண்டாவது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் பள்ளிக் கல்வித் துறை!

சென்னை: கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்தும், மாணவர்களுக்கான கற்றல் முறை குறித்தும் பெற்றோர்களிடம் பள்ளிக் கல்வித் துறை கருத்து கேட்க உள்ளதாகத் தெரிகிறது

மதுரைக்குள் நடக்கும் சுவரொட்டி களேபரம்: அதிமுக உட்கட்சி அரசியல்

மதுரை: தமிழ்நாட்டு அமைச்சர்களான செல்லூர் ராஜு மற்றும் உதயகுமார் ஆகியோரின் ஆதரவாளர்கள் சுவரொட்டி மூலம் களேபரம் செய்து வரும் நிகழ்வு மதுரையை கலங்கடித்துள்ளது.

’டெடியுடன்’ பேருந்தில் பயணித்த இளம்பெண்!

மதுரை: அரசு பேருந்தில் பெரிய அளவிலான கரடி பொம்மையுடன் பயணித்த பெண் அனைவரையும் ஒரு கணம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

குடும்பத் தகராறு: மனைவியை கொன்ற கணவர் தற்கொலை!

புதுச்சேரி: குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தாலியை விற்று கணவரின் இறுதிச் சடங்கை நடத்திய மனைவி!

பெங்களூரு: ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணிபுரிந்த கணவரின் இறுதிச் சடங்குகளை செய்யப் போதிய பணம் இல்லாததால், மனைவி தனது தாலியை விற்று இறுதிச் சடங்குகள் செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 10 முதல் சீரியல் ஷூட்டிங் தொடக்கம் - ஆர்.கே. செல்வமணி

சென்னை: தமிழ்நாட்டில் வரும் ஜூன் 10ஆம் தேதிமுதல் சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகத் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத் தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!

டெல்லி: 3 மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்த மானியமில்லாத கேஸ் சிலிண்டர் விலை நாடு முழுவதும் 11.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் மானியமில்லா சிலிண்டர் விலை 37 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்தியா-நேபாள எல்லையில் பிறந்த ’பார்டர்’ குழந்தை - மோடியை விமர்சித்த அகிலேஷ்

பஹ்ரைச்: லாக்டவுன் அமலில் உள்ள இந்த நேரத்தில் இந்தியாவுக்கும் நேபாளத்திக்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியில் பிறந்த ஆண் குழந்தைக்கு ’பார்டர்’ என பெயரிடப்பட்டுள்ளது.

கரோனா பேரிடர்: மாற்றங்களை எதிர்நோக்கி நெதர்லாந்து சுற்றுலாத் துறையினர்

ஹேக் : கரோனா ஊரடங்கைத் தொடர்ந்து, நெதர்லாந்து சுற்றுலாத் துறையில் பல்வேறு மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை எதிர்நோக்கி சுற்றுலாத் துறையினர் காத்திருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details