தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm - தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் சேவாக்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm

By

Published : May 29, 2020, 8:46 PM IST

மத்திய அரசு லாக்டவுனை மேலும் நீட்டிக்கும் என தகவல்

டெல்லி: கரோனா பாதிப்பின் காரணமாக அறிவிக்கப்ட்ட நாலாவதுகட்ட லாக்டவுன் நிறைவடையவுள்ள நிலையில், மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவின் நேரடி வாரிசு என்ற தீர்ப்பை நானே எதிர்பார்க்கவில்லை - ஜெ.தீபா

சென்னை: அதிகார பலத்தை தன்னிடம் காட்டாமல், நீதிமன்றத்தின் தீர்ப்பை அதிமுக அரசு தலைவணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.

சென்னையில் 254ஆக குறைந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

சென்னை : கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை அமைப்பதில் சில நெறிமுறைகளை மாநகராட்சி கொண்டுவந்துள்ளதால், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீது நடவடிக்கை கூடாது - உயர் நீதிமன்றம்

சென்னை: டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் மீதான வழக்குகளின் மீது எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கக் கூடாது என்ற உத்தரவை ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குளியல் அறையில் வழுக்கி விழுந்த நிகழ்வுகள் - மனித உரிமைகள் ஆணையம் கேள்வி!

சென்னை: மாநகர காவல் நிலையங்களில் குளியல் அறைகளில் வழுக்கி விழுந்த நிகழ்வுகள் எத்தனை என காவல் துறை ஆணையர் பதிலளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மர அரவை இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி உயிரிழப்பு!

கோவை: சூலூர் அருகே மர அரவை இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி தலை துண்டாகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'நான் செய்யும் சேவை என் குழந்தைகளை காப்பாற்றும்'

நடிகர் ராகவா லாரன்ஸின் அறக்கட்டளையில் உள்ள குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அது குறித்த ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜோதிகாவுக்கு பார்த்திபன் பாராட்டு

ஃப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவான 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் இன்று அமேசான் ப்ரைமில் வெளியானது. இந்நிலையில் திரைப்படத்தின் மற்றொரு நடிகரான பார்த்திபன் படத்தில் ஜோதிகாவின் நடிப்பை பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் சேவாக்!

கரோனா வைரஸால் வாழ்வாதாரம் இழந்துள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு, இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக், தனது வீட்டிலேயே உணவு தயாரித்து வழங்கி வருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details