தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 28, 2020, 6:47 PM IST

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7pm

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-7pm
etv-bharat-top10-news-7pm

தமிழ்நாட்டில் மேலும் 827 பேருக்கு கரோனா உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 827 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

தப்லீக் ஜமாத் வழக்கு: 536 வெளிநாட்டினர் மீது 12 பிரிவுகளின் கீழ் புதிய வழக்குகள்!

தப்லீக் ஜமாத் நிகழ்ச்சியில் பங்கேற்ற 14 வெளிநாடுகளைச் சேர்ந்த 536 பேர் மீது சாகேத் நீதிமன்றத்தில் புதிதாக 12 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வெளிமாநில தொழிலாளர்களிடம் இருந்து பயணக்கட்டணம் வசூலிக்கக் கூடாது - உச்ச நீதிமன்றம்

டெல்லி: வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த வழக்கில், அவர்களிடமிருந்து பயணக்கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனைவருக்கும் 7,500 ரூபாய் வழங்க வேண்டும் - சோனியா காந்தி கோரிக்கை

டெல்லி: கரோனா வைரஸ் நோயின் தாக்கத்திலிருந்து மீளும் நோக்கில் அனைவரின் வங்கி கணக்குகளிலும் 7,500 ரூபாய் செலுத்த வேண்டும் என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

+2 வேதியியல் தேர்வில் தவறான கேள்வி... கூடுதல் மதிப்பெண்

சென்னை:12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற வேதியியல் தேர்வில் கேட்கப்பட்டிருந்த தவறான கேள்விக்கு கூடுதலாக மூன்று மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுக - திமுக எம்பிக்கள் கையெழுத்துடன் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்

சென்னை : புதிய மின்சாரத் திருத்தச் சட்டம் - 2020ஐ திரும்பப் பெற வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசின் கூட்டணியில் அல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மீண்டும் 'பிகில்' அட்லீயுடன் இணையும் ஏ.ஆர். ரஹ்மான்?

விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படப்பிடிப்பின்போது ஏ.ஆர். ரஹ்மானுடன் இயக்குநர் அட்லீ இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

‘சமூக வலைதளங்களை நம்பாதீங்க; தோனி மீண்டும் களமிறங்குவார்’

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதாக வரும் சமூக வலைதள வதந்திகளை யாரும் நம்ப வேண்டாமென தோனியின் சிறுவயது பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பயணிகள் விமானத்தை சரக்கு விமானமாக மாற்றும் ஸ்பைஸ்ஜெட்

டெல்லி: சரக்கு விமானங்களின் தேவை அதிகரித்துள்ளதால் மூன்று பயணிகள் விமானங்களைச் சரக்கு விமானங்களாக மாற்றியுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

'மூச்சு விட முடியல' என்று கதறிய பின்னரும் விடாத போலீஸ் - உயிரிழந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்

வாஷிங்டன்: தன்னால் மூச்சு விட முடியவில்லை என்று கதறிய பின்னரும் காவலர் தனது பிடியை விடாததால் ஆப்பிரிக்க அமெரிக்கர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details