தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

4 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 4pm - ஈடிவி பாரத் 1 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 4 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-4-pm
etv-bharat-top10-news-4-pm

By

Published : May 23, 2020, 3:48 PM IST

திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்துக்கள் ஏலம்

திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்துக்களை ஏலம் விடப்போவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தடுப்பூசி திட்டங்களில் காலதாமதம்... ஆபத்தில் 80 மில்லியன் குழந்தைகள் - எச்சரிக்கும் WHO

ஜெனிவா: கரோனா தொற்றால் வழக்கமாக நடத்தப்படும் மற்ற நோய்களுக்கான தடுப்பூசி திட்டங்களில் காலதாமதமாகியுள்ளதால் 80 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

காவல் துறையின் எண்கள் 100, 112 வழக்கம்போல் செயல்படும்

சென்னை: தமிழ்நாட்டில் அவசர தேவைகளுக்காக அழைக்கும் காவல் துறையின் எண்கள் 100, 112 வழக்கம்போல் செயல்படும் எனத் தமிழ்நாடு காவல் துறை அறிவித்துள்ளது.

'திமுக போட்ட பிச்சை' முதல் பிணை வரை: ஆர்.எஸ். பாரதி வழக்கு ரீவைண்ட்!

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பட்டியலின மக்களைத் தரக்குறைவாகப் பேசியதாக கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதுகுறித்த விரிவான செய்தித் தொகுப்பு.

சென்னையில் 10 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!

சென்னை: மாநகராட்சி முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,364ஆக அதிகரித்துள்ளது.

லே பகுதியில் ஆலோசனை மேற்கொண்ட ராணுவ தலைமைத் தளபதி

லடாக்: இந்திய-சீன எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவிவரும் சூழலில், ராணுவ தலைமைத் தளபதி நாரவனே, லே பகுதியில் உயர்மட்டக் குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

‘காங்கிரஸ் கட்சி அரசியல் விளையாடுகிறது’ - உ.பி., துணை முதலமைச்சர் குற்றச்சாட்டு!

லக்னோ: கரோனா தொற்று பரவும் சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சி அரசியல் விளையாடுவதாக உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா குற்றஞ்சாட்டியுள்ளார்.

மணலூரில் இன்றுமுதல் அகழாய்வுப் பணிகள் தொடங்க அனுமதி!

மதுரை: கீழடி அருகே உள்ள தொல்லியல் மேட்டில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான மணலூரில் இன்றுமுதல் அகழாய்வுப் பணிகள் தொடங்க உள்ளதாகத் தமிழ்நாடு தொழில் துறை அறிவித்துள்ளது.

இரண்டு கோடி பார்வையாளர்களைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்

அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, 'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி, யூடியூப் வாயிலாக இரண்டு கோடி பார்வைகளைக் கடந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்ட ஐசிசி!

தற்போதைய சூழல் சரியான பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும்போது வீரர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details