தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1pm - ஈடிவி பாரத் 1 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-1pm
etv-bharat-top10-news-1pm

By

Published : May 28, 2020, 12:51 PM IST

இந்தியாவின் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது- பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே விதிகளை மீறி பாகிஸ்தான் வான்வெளியில் பறந்த இந்தியாவின் சிறிய ரக ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

வீர சாவர்க்கர் பிறந்தநாள்: அஞ்சலி செலுத்திய மோடி!

டெல்லி:வீர சாவர்க்கரின் பிறந்ததினத்தை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

ஜூன் மாதம் கூடும் நாடாளுமன்ற நிலைக் குழு!

டெல்லி: உள் துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக் குழு அடுத்த வாரம் கூடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணம் செய்த இருவருக்கு கரோனா

டெல்லி: மே 25ஆம் தேதி ஸ்பைஸ் ஜெட் விமானம் அகமதாபாத்திலிருந்து கவுகாத்தி சென்ற இரண்டு பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

2 மாதங்களுக்கு பின் போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் சென்னை!

சென்னை: ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதால் நீண்ட நாள்களுக்கு பிறகு சென்னை ஜிஎஸ்டி சாலை கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்துள்ளது.

மாவட்ட ஆட்சியரை மிரட்டிய வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் பிணை

கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டிய வழக்கில் எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் முன் பிணை வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்ஸ்டாவில் 10 மில்லியன் ஃபாலோயர்கள் - நடாலி போர்ட்மேன் வழியில் கொண்டாடிய சமந்தா

பிரபல தென்னிந்திய நடிகை சமந்தா, இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றுள்ளதைக் கொண்டாடும் வகையில் 10 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்து உதவியுள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் உறுதியான இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்...!

மெல்போர்ன்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள டெஸ்ட் தொடர் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமான டிக்கெட்டுகளை ரத்து செய்தால் பணம் வரும்... ஆனால் வங்கிக் கணக்கில் அல்ல!

டெல்லி: ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கான பணத்தை வங்கிக் கணக்குகளுக்குப் பதில் இணைய வாலெட்டுகளில் இண்டிகோ, ஏர்ஏசியா ஆகிய விமான நிறுவனங்கள் வழங்குகின்றன.

இந்தியாவால் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் - இம்ரான் கான்

இஸ்லமாபாத்: இந்தியா தனது ஆணவப்போக்கின் காரணமாக அண்டைநாடுகளுடன் அச்சுறுத்தும் விதமாக நடந்துகொள்கிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details