தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1pm

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-1-pm
etv-bharat-top10-news-1-pm

By

Published : May 30, 2020, 12:51 PM IST

'நாட்டின் வரலாற்றுப் பிழைகளைத் திருத்திய நரேந்திர மோடி!'

டெல்லி: நாட்டின் வரலாற்றுப் பிழைகளைத் திருத்தி தற்சார்பு இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கியுள்ளதாக உள் துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

மோடி 2.0: ஓராண்டு நிறைவை ஒட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமர் கடிதம்

டெல்லி: இரண்டாவது முறை பிரதமராகப் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

சிறப்பு ரயிலா, கரோனா அதிவிரைவு ரயிலா? - சாடும் மம்தா

கொல்கத்தா: இந்தியன் ரயில்வே ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்குகிறதா அல்லது கரோனா அதிவிரைவு ரயில்களை இயக்குகிறதா

பாஜக தனது தோல்வியை ஒத்துக் கொள்ள வேண்டும் - சிதம்பரம்

டெல்லி: மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்ததைத் தொடர்ந்து, பாஜக தனது தோல்வியை ஒத்துக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அதிகபட்சம் 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதி!

சென்னை: சின்னத்திரை படப்பிடிப்பில் அதிகபட்சமாக 60 பேரை வைத்து நடத்திடலாம் என முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கரோனாவில் காட்டும் அலட்சியம் வெட்டுக்கிளியிலும் வேண்டாம் - மு.க.ஸ்டாலின்

சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு காட்டி வரும் அலட்சியத்தை போன்று வெட்டுக்கிளி படையெடுப்பைத் தடுத்திடும் விவகாரத்திலும் தொடரக்கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பதின் பருவத்தினரின் வாழ்வியலே 'மின்மினி' - 'சில்லுக் கருப்பட்டி' ஹலிதா ஷமீம்

சென்னை: "சில்லுக் கருப்பட்டி" படத்தை இயக்கிய ஹலீதா, தற்போது 'மின்மினி' படத்தின் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

ஒலிம்பிக்கிற்குத் தயாராகும் விகாஸ் கிருஷ்ணன் ஈடிவி பாரத்துக்குச் சிறப்புப் பேட்டி!

அடுத்தாண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு, தான் தயாராகிவருவது குறித்து இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணன் நமது ஈடிவி பாரத்திடம் மனம் திறந்து பேசியுள்ளார்.

உலக சுகாதார அமைப்புடன் உறவு துண்டிப்பு - ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பை உலக சுகாதார அமைப்பு கையாண்டவிதம் சரியில்லை எனக் கூறி அந்த அமைப்புடனான உறவை அமெரிக்க துண்டித்துக்கொள்வதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் 60 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு எண்ணிக்கை

உலகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் புதிதாக ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 608 பேருக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details