தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1pm - ETVBharat latest news

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-1-pm
etv-bharat-top10-news-1-pm

By

Published : May 26, 2020, 12:51 PM IST

பாம்பை வைத்து மனைவியைக் கொன்றவரிடம் தீவிர விசாரணை!

திருவனந்தபுரம்: பாம்பை வைத்து மனைவியைக் கொன்றவரை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

டெல்லி - காசியாபாத் எல்லை மீண்டும் மூடல்!

டெல்லி: உத்தரப் பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு வாகன போக்குவரத்து தற்காலிகமாக ரத்துசெய்யப்படுவதாக காசியாபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

'பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு காரணம் இதுதான்'

பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு முன்னறிவிப்பின்றி அமல்படுத்தப்பட்ட ஊரடங்குதான் காரணம் என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

நாளொன்றுக்கு 25 விமானங்கள் போதும் - தலைமைச் செயலர் கடிதம்!

சென்னை: ஒரு நாளைக்கு சென்னைக்கு 25 விமானங்கள் மட்டுமே இயக்க வேண்டும் என விமான போக்குவரத்துத் துறைக்கு தமிழ்நாடு தலைமைச் செயலர் சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.

விமான நிலையத்திலிருந்து தப்பிக்க முயன்ற பெண்!

கரோனா சூழலில் சென்னையிலிருந்து பெங்களூரு விமான நிலையம் வந்த பெண், அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தேவாலய அரங்கை இடித்த இந்து பரிஷத் - பினராயி விஜயன் காட்டம்!

நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி வரும் 'மின்னல் முரளி' படத்தின் தேவாலய அரங்கை இந்து அமைப்பை சார்ந்த சிலர் இடித்துத் தள்ளியது கேரளாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்பீர் சிங் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானதையடுத்து, அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம்செய்யப்பட்டது.

தொழிலாளர் சட்டத்திருத்தம் குறித்து சர்வதேச தொழிலாளர் அமைப்பு கவலை

ஜெனிவா : இந்தியாவில் தொழிலாளர் சட்டங்களில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் கவலையளிப்பதாக உள்ளது என சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

கோவிட்-19 தொடர்பாக உலகளாவிய மரபணு ஆய்வில் இறங்கியுள்ளது வாஷிங்டன் பல்கலைக்கழகம்!

ஹைதராபாத்: கோவிட்-19 தாக்கம் குறித்து ஆய்வு செய்ய உலகளாவிய மரபணு ஆய்வை மேற்கொள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது.

அட்டகாசமாக வெளியான ரியல்மியின் நான்கு தயாரிப்புகள்!

நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட நான்கு தயாரிப்புகளை அந்நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details