தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1pm - ஈடிவி பாரத் 1 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-1-pm
etv-bharat-top10-news-1-pm

By

Published : May 23, 2020, 1:01 PM IST

ஆர்.எஸ். பாரதி இடைக்கால பிணையில் விடுவிப்பு

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குடிபெயர் தொழிலாளர்களின் கதையை யூ-ட்யூபில் வெளியிட்ட ராகுல்

டெல்லி: கரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பும் குடிபெயர் தொழிலாளர்களிடம் உரையாடிய காணொலியை தனது யூ-ட்யூப் சேனலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

'அறிவியல் பூர்வமற்ற நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது'

டெல்லி: சுகாதாரப் பணி ஊழியர்களின் தனிமைப்படுத்துதல் கால அளவில் மாற்றம் செய்திருப்பது அறிவியல் பூர்வமற்ற நடவடிக்கை என மருத்துவர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற சிறுமி - இவாங்கா ட்ரம்ப் நெகிழ்ச்சி

பிகாரில் காயமடைந்த தனது தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 13 வயதான சிறுமியை அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.

'தவறுதலாக அச்சொல்லைப் பயன்படுத்திவிட்டேன்' - மன்னிப்பு கோரிய திமுக எம்எல்ஏ

முடிதிருத்துபவர்கள் சமுதாயம் குறித்து தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பயன்படுத்திய வார்த்தைக்காக அவர்களிடம் திமுக எம்எல்ஏ பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மன்னிப்பு கோரினார்.

அச்சு ஊடகங்கள் சந்திக்கும் நெருக்கடிகள்: மாநில பாஜக தலைவரிடம் மனு

சென்னை: ஊரடங்கினால் அச்சு ஊடகங்கள் சந்தித்துவரும் நெருக்கடிகளைக் களைய உதவுமாறு தமிழ்நாடு மாநில பாஜக தலைவரிடம் செய்தித்தாள் நிறுவனத்தினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இந்தியாவில் 27 பூச்சிக்கொல்லிகளுக்கு தடை!

27 சர்ச்சைக்குரிய பூச்சிக்கொல்லிகளைத் தடைசெய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை இந்தியாவின் ஏற்றுமதியை மோசமாகப் பாதிக்கக்கூடும் என்று வேளாண் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த நடிகை குஷ்பூ

தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்பை தொடங்க அனுமதி வழங்கப்பட்டதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் தென்னிந்திய தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக, சங்கப் பொதுச் செயலாளர் குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.

'உங்களது சொந்த பாதுகாப்பில் பயிற்சியைத் தொடங்குங்கள்' - அதிர்ச்சியில் வீரர்கள்

பயிற்சி மேற்கொள்ள விரும்பும் தடகள வீரர்கள், தங்களது சொந்த பாதுகாப்பிலேயே பயிற்சியை மேற்கொள்ள வேண்டுமென இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் 50 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,603 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details